இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பின்னர் இந்தியாவில் மறைந்திருந்த கடத்தல்காரரும் அவரது மனைவியும் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதே வேளை குறித்த சந்தேக நபர்களை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்யதுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு 15, ஜம்பட்டா தெருவைச் சேர்ந்த 30 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸார் இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க சந்தேக நபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஏப்ரல் 2022 இல் கடற்படையில் பணியாற்றிய ஒருவரை சுட முயன்றதற்காக சந்தேக நபருக்கு நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2017 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பகுதியில் பல சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், 2018 ஆம் ஆண்டு கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.