பிமலிடம் இருந்து பறிக்கப்பட்ட முக்கிய அமைச்சுப் பதவி

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து அமைச்சுப் பதவியொன்று பறிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

சுங்கத்தில் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொலகளன்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சிவில் விமான சேவைகள் அமைச்சு பிமல் ரத்நாயக்கவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. 

இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இன்றே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விசாரணைகள் நடைபெறும் அமைச்சருக்கு குறித்த அமைச்சில் பதவி வகிப்பது உசிதமல்ல என்பதால் இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பிமல் ரத்நாயக்கவின் முன்னைய அமைச்சுப் பதவிகளான,  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் உள்ளிட்டவற்றில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பதவி மீளெடுக்கப்பட்டு அது அனுர கருணாதிலக்கவுக்கு வழங்கப்பட்டது.

மேலும், பிமல் ரத்நாயக்கவிற்கு  புதிதாக நகர மேம்பாட்டு அமைச்சு இணைக்கப்பட்டதோடு, தற்போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு  உள்ளிட்ட அமைச்சுக்கள் அவரின் கீழ் உள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *