இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் தற்போது செயற்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் 1041 பாதுகாப்பு நிலையங்களை அண்மித்து இந்த மருத்துவக் குழுவினர் கடமைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (05) விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
