கட்டான ப பிரிவின் கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பண்டாரவளை பகுதியில் வசிக்கும் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் நீர்கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது இறந்துவிட்டதாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் கட்டான பொலிஸாரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இறந்த இளைஞர், குறித்த பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்ததாகவும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், அங்குள்ள வெளிப்புறக் கொட்டகையில் வெடிப்பு நிகழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
