நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் பயணிகள் படகில் ஏற முயன்ற ஒருவர் இன்று (10) காலை படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தேங்காய் மூட்டையுடன் படகில் ஏற முற்பட்டுள்ளார்.
அருகில் நின்றவர்கள் அவரை மீட்க முயற்சித்த போதும் உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது.
உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
