நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் ,
நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் இருந்து நானுஓயா சமர்செட் தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி தேயிலை கொழுந்துடன் விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான லொறியினை மீட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன் லொறியை செலுத்திய சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்