தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

அண்மைய நாட்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில், 

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (07) நாள் முழுவதும் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான  நிலையிலும், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காற்றின் தரக்குறியீடு 68 மற்றும் 114 க்கு இடையில் பதிவாகும்.

நாட்டில் நேற்று வியாழக்கிழமை (06) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையிலும் குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் மிதமான  நிலையிலும் காணப்பட்டது.

எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம். 

காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மைய நாட்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில், 

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (07) நாள் முழுவதும் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான  நிலையிலும், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காற்றின் தரக்குறியீடு 68 மற்றும் 114 க்கு இடையில் பதிவாகும்.

நாட்டில் நேற்று வியாழக்கிழமை (06) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையிலும் குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் மிதமான  நிலையிலும் காணப்பட்டது.

எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம். 

காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *