ட்ரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது.

ஏனைய நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலடியாக அது அமையும் என அவர் கூறியுள்ளார். மேலும் பல பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இது மிகப் பெரிய வர்த்தகப் போருக்கு வழிகோலும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. ட்ரம்ப்பின் வரிகளால் வாகன உற்பத்தி, உலோகங்கள், மருந்துப் பொருட்கள், மதுபானம், மரக்கட்டைகள், மின்-தகடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகள் பாதிக்கப்படும்.

வாகன உற்பத்தி

மார்ச் 26ஆம் திகதியன்று ட்ரம்ப் அனைத்து வாகனங்கள் மீதும் 26% வரி விதித்தார். நேற்று அவை நடப்புக்கு வந்துள்ளன. இதனால் உலகளவில் வாகனங்களின் விலை அதிகரிக்கலாம்.

உலோகங்கள்

ட்ரம்ப் மார்ச் 12ஆம் திகதியன்று எஃகு, அலுமினியம் ஆகிய பொருட்களின் மீது 25% வரி விதித்தார்.

மருந்துப் பொருள்கள்

ட்ரம்ப் மருந்துகள் உட்பட மருந்தகப் பொருட்கள் மீது வரி விதிக்கப்போவதாகக் கூறியுள்ளார். இதுவரை பொதுவாக மருந்தகப் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டதில்லை. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மதுபானம்

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் மதுபானங்களின் மீது 200% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

மரக்கட்டைகள்

கனடாவிலிருந்து இறக்குமதியாகும் மரக்கட்டைகள் மீது ஏற்கனவே வரி விதிக்கப்பட்டுள்ளது. அது அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மின்-தகடுகள்

மின்-தகடுகள் மீது 25% அல்லது அதற்கும் அதிகமான வரியை விதிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். வளர்ந்துவரும் அத்துறை இதனால் பாதிப்படையும்.

எண்ணெயும் எரிவாயுவும்

அமெரிக்கா விதித்திருக்கும் அனைத்து வரிகளுக்கும் பதிலடியாக, சீனா அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் எண்ணெய் மீது 10% வரியும் எரிவாயு மீது 15% வரியும் விதித்துள்ளது. அதனால் அந்தத் துறை பெரியளவில் பாதிப்பை எதிர்நோக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *