அம்பாறை, கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் லொறியொன்று வீதியின் ஓரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த பெண் மற்றும் சிறுவன் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (22) மாலை இவ் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் மற்றும் சிறுவன் இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி அம்பாறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உஹன பகுதியைச் சேர்ந்த 4 வயதான சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
விபத்தில் தொடர்புடைய டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் அம்பாறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
