செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்ற போராட்டத்தில்
சர்வதேசமே..! செம்மணி அவலத்திற்கு உன் தலையீடு வேண்டும்.
பிரித்தானிய அரசே..! உங்கள் பாராளுமன்றத்தில் செம்மணி அவலத்திற்கு பிரேரணை ஒன்றை நிறைவேற்றுங்கள்.
ஐ.நா சபையே..! ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்.
நீதி வேண்டும்…!!! செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசே..! செம்மணிப் படுகொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து.
ஸ்ரீலங்கா பேரினவாத அரசே..! ராணுவக் கரம் கொண்டு தமிழர்களை அடக்காதே..!!!
எம் உறவுகளின் படுகொலைக்கு நீதி வேண்டும்..!!!
பிரித்தானியாவே..! செம்மணி புதைகுழிக்கு நீதியை பெற்றுக்கொடு.
அனுர அரசே..! சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கு.
சிங்களப் பேரினவாதமே.. தமிழினத்தை கருவறுக்காதே…!!!
வேண்டும்.. வேண்டும்.. செம்மணிப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்…!!!போன்ற கோசங்களை எழுப்பியவாரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்கள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.











