சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோவில் தேர்தல்களுக்கு பாதிப்பு!

ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன.

இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, கடுமையான பனிநிலையால் வாக்களிப்பு விகிதம் குறையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒட்டாவா, டொரொண்டோ உள்ளிட்ட நகரங்களில் பனிப் பிரச்சனை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம் என ஒன்றாரியோ தேர்தல் நிறுவனத்தின் ஊடக பிரதானி க்ரெக் ஃப்ளட் (Greg Flood) தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு மையங்கள் (Polling Stations) எங்கு அமைந்திருந்தாலும் அந்த இடங்களில் மக்கள் எளிதாக அணுகக்கூடிய சூழல் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“வாக்களிப்பு மையங்களுக்குச் செல்லும் பாதைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது முக்கிய முன்னுரிமையாக கருதப்படுவதாக டொரோண்டோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பனி அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி சாலைப் பராமரிப்பு குழுக்கள், குளிர்கால பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள், பூங்கா மற்றும் மகிழ்ச்சி துறை அதிகாரிகள் இணைந்து பணிபுரிகிறார்கள் என தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே 71 செ.மீ. பனி குவிந்துள்ளது எனவும் இது கடந்த ஆண்டு முழுவதும் பெய்த பனியை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை பாதிப்புக்கள் குறித்து அச்சம் கொண்டவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *