கம்பளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியது.
காதல் சம்பந்தப்பட்ட விவகாரம் ஒன்றினாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து சந்தேக நபரை அடையாளம் கண்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது குறித்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனும் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
