சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உடலைப் பொலிவூட்ட பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய 179 ரின் பால்மாவுடன் இரண்டு பேர் இன்று (05) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் நீர்கொழும்பை சேர்ந்தவர் என்றும், மற்றையவர் கொழும்பு, கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று காலை மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மனித நுகர்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஓளடதங்கள் அதிகாரசபையின் அனுமதி இல்லாமல் இந்த பால்மா தொகை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.