மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணிக்கக்கல் அகழ்வில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதானவர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
