கொழும்பு மாவட்டத்தில் காணி விலை உயர்வு

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கொழும்பு மாவட்ட நிலங்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பில் இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

நில மதிப்பீட்டுச் சுட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த அதிகரிப்பு காணப்படுவதுடன், குறிப்பாக குடியிருப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான நிலங்களின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, குடியிருப்பு நிலங்களின் விலை 12.4 சதவீதமாகவும், வர்த்தக நிலங்களின் விலை 11.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.

கைத்தொழில் சார்ந்த நிலங்களின் விலை 8.0 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *