கிளிநொச்சியில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் விசேட திட்டம் அறிமுகம்

பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட இடங்களான முகமாலை தொடக்கம் ஆனையிறவு பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை பச்சிளைப்பள்ளி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்றது என தவிசாளர் சுரேன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையி்ல், இதன் அடிப்படையில் பொதுப் போக்குவரத்து வீதிகளில் உள்ள கட்டாக்காலி கால்நடைகளை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அவ் கால்நடைகளை பிடிச்சு அகற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் பிடிக்கும் ஒரு கால்நடைக்கு தலா 2500 ரூபா வரையான தண்டங்களை செலுத்திய பின்னரே பண்ணையாளர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர் தமது கால்நடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே இந்த விடயங்களை கணத்தில் கொண்டு பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை கட்டி பாதுகாப்புடன் வளர்க்குமாறும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வளர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.

அண்மை காலங்களில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளால் அதிகமாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இவ்வாறான விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கே இவ்வாறான செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

 அத்துடன் தற்போது விதைப்பு காலம் என்பதால் கிளிநொச்சி ஏனய பிரதேசங்களில் இருந்து பண்ணையாளர்கள் பாரியளவான கால்நடைகளை பச்சிளைப்பள்ளி பிரதேச எல்லைக்குள் கொண்டு வருவதை அவதானிக்க கூடியவாறு உள்ளது.

உண்மையில் கால்நடைகளுக்கு அதிகம் நோய்கள் பரவும் காரணத்தால் இனி வரும் காலங்களில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குள் வேறு இடங்களில் இருந்து வரும் கால்நடைகளை அனுமதிப்பது இல்லை என்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இனிமேல் சபையின் எல்லைக்குள் வரும் கால்நடைகளுக்கும் தண்டப்பணம் அறவிட்டு கால்நடைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

 எனவே ஏனய பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் இவ்விடயங்களை கவணத்தில் கொண்டு எமது எல்லைக்குள் உங்கள் கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *