காஸா முனையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் ஒரு நாளில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சரகம் நேற்று (7) தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 137 போ் காயமடைந்ததாகவும் அமைச்சரகம் கூறியது.
அமைச்சரக தரவுகளின்படி, காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கடந்த 2023 ஒக்டோபர் . 7-ஆம் திகதி முதல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை ஐம்பதாயிரத்து எழுநுாற்று ஐம்பத்திரண்டு பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதோடு ஒரு இலட்சத்து பதினைந்தாயிரத்து நானுாற்று எழுபத்தைந்து போ் காயமடைந்துள்ளனா்.
எனினும், உயிரிழந்தவா்களில் பொதுமக்கள் எத்தனை போ், ஆயுதப் படையினா் எத்தனை போ் என்ற விவரத்தை அமைச்சரகம் வெளியிடவில்லை. இந்தப் போரில் இதுவரை இருபதாயிரம் ஆயுதக் குழுவினரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.