அநுராதபுரம், கஹடகஸ்திகிலிய பகுதியில் நேற்று (23) பகல் மரமொன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிலுக்கு ஏறும்போது ஏணி கீமுறிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
