தியபெதூம – திக்கல்பிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மேலும் தெரியவருவதாகவது, உயிரிழந்த நபர் மகளின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று இரவு திக்கல்பிட்டிய நவ சக்தி விவசாய அமைப்புக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
54 வயதுடைய கிரிதலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பொலன்னறுவை வைத்ததியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியபெதூம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.