கனடா பாராளுமன்றில் மர்ம நபர் அத்துமீறி நுழைந்ததால் பாராளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, கடந்த மார்ச் 23 அன்று பாராளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் கனடாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கனடா நாட்டின் பாராளுமன்ற ஹில்ஸின் கிழக்குத் தொகுதிக் கட்டிடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
அவர் அன்றிரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தார். அடுத்த நாள் காலை வழக்கம் போல் பாதுகாப்பு பணியாளர்கள் சென்ற போது, மர்ம நபர் உள்ளே இருந்ததை பார்த்ததும் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து கிழக்குத் தொகுதி கட்டிடத்திற்குள் இருந்த நபரை கைது செய்தனர் .
இதேவேளை பாதுகாப்பு சூழலைக் கருத்திற் கொண்டு கனடா பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.