இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குத் தகுதி பெற்றவர்களுக்கு மேலதிகமாக, இந்தப் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2024 ஒக்டோபர் முதலாம் திகதி மற்றும் 2025 பெப்ரவரி முதலாம் திகதிகளில் சான்றளிக்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியலின்படி, புதிய வாக்காளர்கள் உள்ளூராட்சித் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கு 172,96,330 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை (12) முடிவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தபால் மூலம் வாக்களிக்க தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் நாளைய தினத்திற்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.