ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்களை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் இந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் வரவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இன்று (28) தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அடுத்த சில நாட்களில் இறக்கப்படும் ஜப்பானில் இருந்து வரும் முதல் தொகுதி வாகனங்களை பொதுமக்கள் ஆய்வு செய்ய முடியும் என்றும் எதிர்காலத்தில் பொதுமக்கள் பல வகையான வாகனங்களை எளிதாகத் தேர்வுசெய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.