உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், தனது இரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்புவதாக 27 ஆம் திகதி அறிவித்திருந்தது.