கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் பரவலாக காடுத்தீ புகை காரணமாக, இன்று டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
டொராண்டோ பெரும்பாக பகுதி (GTA) மற்றும் தென்கிழக்கு ஒண்டாரியோ பகுதிகளில் சிறப்பு காற்று தர அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களமம் அறிவித்துள்ளது.
மேலும், ஐந்து மாகாணங்கள் மற்றும் ஒரு மாகாணத்திற்கும் இதே போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் வட ஒண்டாரியோ மற்றும் மேற்கு கனடாவில் 15 கட்டுப்பாடற்ற காடுத்தீக்கள் பதிவாகியுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களத்தின் Environment Canada- வானிலை நிபுணர் டேவிட் பிலிப்ஸ் கூறியுள்ளார்.
டொராண்டோ இன்று உலகில் 4வது மோசமான காற்று தரம் கொண்ட நகரமாகப் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் டொராண்டோவின் காற்று தரம் 7/10 எனப் பதிவாகியுள்ளது. இது “உயர் அபாயம்” என வகைப்படுத்தப்படுகிறது.
காற்று தர அறிவிப்பு அமலிலுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், வெளியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டுமேன பரிந்துரை செய்துள்ளது.