நாம் வாழும் காலத்தில் வானில் பெரிய மாற்றம் தெரியப்போகிறது. இதனை ஆய்வாளர்கள் சூப்பர் நோவா வெடிப்பு என்று கூறுகிறார்கள். இது நடக்கும் போது வானில் வித்தியாசமான ஒளி தோன்றும்.
இந்த இரண்டு கூட்டத்தில் சிவப்பு ஷநட்சத்திரம் மற்றும் வெள்ளை குறுமண்டல நட்சத்திரம் என 2 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து சுற்றும். சுற்றும்போது ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்திலிருந்து ஹைட்ரஜனை எடுத்துக்கொள்ளும்.
இப்படி நடக்கும்போது 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். இந்த நிகழ்வை நோவா என்று கூறுவார்கள். 1217 ஆம் ஆண்டு தொடங்கி 1786, 1866, 1946 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்கிறது. இந்த கால இடைவெளியை கவனித்தால் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிப்பு நிகழ்வதை தெரிந்துக்கொள்ள முடியும். அந்த வகையில் 2025-2026ம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம்.
இந்த நட்சத்திரங்கள் சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ தூரம் வரை பயணிக்கும். அப்படியெனில் 3000 ஆண்டுகளுக்கு அது எவ்வளவு தூரத்திற்கு பயணிக்கிறதோ அந்த தொலைவில்தான் T Coronae Borealis நட்சத்திர கூட்டம் இருக்கிறது. இதை வேறு மாதிரியாக புரிந்துக்கொள்வதெனில், 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நட்சத்திரம் வெடித்திருந்ததால்தான் இப்போது அதன் ஒளியை நம்மால் பார்க்க முடியும்.
இரவு பத்து மணிக்கு மேல் வடமேற்கு திசையில் இந்த வெடிப்பை பார்க்க முடியும். வெறும் கண்களால் இதை பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 80 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இது தெரியும் என்பதால் வாழ்நாள் அதிசயமாக இது இருக்கிறது. எனவே நீங்கள் இதை பார்க்க தவறாதீர்கள்.