ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் ஆதரவளிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு அறிக்கை இன்று (28) அந்த நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

இன்று (28) பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, தற்போது விசேட உரையொன்றை ஆற்றி வருகிறார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 

இதன் மூலம் நல்லதொரு பலன் கிடைக்கும் என தான் நம்புவதாகவும், பொருளாதாரம் மிகவும் வலுவான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். 

“நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என்றால், பொருளாதார நெருக்கடி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று. அது தற்போது முடிந்துவிட்டது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் ஆட்சிகள் கவிழ்ந்துள்ளன. பொருளாதார நெருக்கடியால் ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே. அது நடக்காது.அதற்காக வார்த்தைகளையோ, நேரத்தையோ வீணாக்க வேண்டாம். அவை நடக்கப்போவதில்லை. அடுத்து, எங்கள் நாட்டில் ஆட்சிகள் வீழ்ந்த வரலாறு உள்ளது, கட்சிகளுக்குள் நெருக்கடிகளை உருவாக்கி. 2001ல் சந்திரிகா அம்மையாரின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. முக்கிய காரணம், ஆட்சியில் இருந்த சிலர் எதிர்த்தரப்புக்கு சென்று அமர்ந்ததால், ஆட்சிக்கு உள்ளே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஆட்சிகள் வீழ்ந்த சந்தர்ப்பங்கள் உள்ளன. 

ஆனால், நீங்கள் நினைக்கும் இந்த ஆட்சி, எந்தவித உள் முரண்பாடுகளும் உருவாகாத ஒரு ஆட்சி. சிலர் என்னை உயர்த்தி, பாராளுமன்றத்தில் உள்ள மற்றவர்களை தாழ்த்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் அதற்கு சிக்கப்போவதில்லை. மிகவும் நன்றி. ‘அவர் நல்லவர், மற்றவர்கள் மோசமானவர்கள்’ என்று சொல்வது ஒரு பொறி தான். அந்த பொறிகளுக்கு நாங்கள் சிக்குவோமா? அதனால், உள் நெருக்கடி மூலம் ஆட்சியை வீழ்த்தலாம் என்று நினைக்கிறீர்கள் என்றால், அதுவும் நடக்காது. 

பின்னர், நீங்கள் கற்பனை செய்கிறீர்கள், தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இந்த ஆட்சி வீழ்ச்சியடையும் என்று. அதுவும் நடக்காது. எனவே, உங்களுக்கு புதிய துருப்புச் சீட்டுகள் தேவைப்படும்; ஒரு ஆய்வு செய்ய வேண்டும். 

அடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி, போராட்டங்கள் நடத்தி, ஆளுபவர்களை விரட்டிய வரலாறு உள்ளது. உங்களால் ஊடக சந்திப்புகள் மூலம் ஏதாவது சொல்வதைத் தவிர, சபையில் ஏதாவது சொல்வதைத் தவிர, மக்களை ஒன்று திரட்டி ஏதாவது சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, மக்கள் எதிர்ப்பு மூலம் ஆட்சியை விரட்டலாம் என்று கற்பனை செய்கிறீர்கள் என்றால், அவை அனைத்தும் தோல்வியடையும்.”

இதேவேளை, பொருளாதாரம் இப்போது நிலையாக உள்ளது. பயங்கரவாதமும் இனவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவத்தின் பணியாளர்கள் 100,000 ஆகவும், இலங்கை கடற்படை 40,000 ஆகவும், இலங்கை விமானப்படை 18,000 ஆகவும் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *