கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் மீது விசேட விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த விசாரணையில் பல முக்கிய முன்னாள் அமைச்சர்களை விசாரணை செய்யவுள்ளதுடன் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.
மேலும், இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரிடமும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.