தொழில்நுட்ப நிறுவனமான Apple பிப்ரவரி 19-ஆம் திகதி ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது
இது iPhone SE 4-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Apple நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிம் குக் (Tim Cook) சமூக ஊடக தளமான X-இல் “ஒரு புதிய குடும்ப உறுப்பினரை சந்திக்க தயாராகுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு குறுகிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் வெள்ளி நிற ஆப்பிள் லோகோ உள்ளது.
அவர் வேறு எதையும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் குடும்பத்தில் சேரும் புதிய உறுப்பினர் என்றால் அது iPhone SE 4-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.