அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள ஸ்கொட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் பலியானதோடு பலர் காயமடைந்தனர். இதேவேளை ஒருவர் விமானத்தில் இன்னும் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினரால் மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த விபத்து தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெட் விமானம் மீது நடுத்தர அளவிலான ஜெட் விமானம் ஒன்று மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், குறித்த ஜெட் விமானம் மோதிய வேகத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது என தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.