லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனி 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 277 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 279 ரூபாவாகவும் 1 கிலோகிராம் கோதுமை மாவு 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 162 ரூபாவுக்கு விற்பனையாகிறது.
அதுபோல், 425 கிராம் டின் மீன் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 490 ரூபாவாகும். 1 கிலோ உருளைக்கிழங்கு 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 185 ரூபாவாகவும் 1 கிலோ வெள்ளை பட்டாணி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 750 ரூபாவுக்கும் விற்பனையாகிறது.
மேலும், 1 கிலோகிராம் பெரிய வெங்காயம் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 160 ரூபாகவும், 1 கிலோகிராம் வெள்ளைப்பூடு 20ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 575 ரூபாவாக விற்பனையாகிறது.