பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை நிமோனியாத் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அவருக்கு சுவாசிக்கத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் உதவியாலேயே தற்போது அவர் சுவாசித்து வருகின்றார்.
அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாக நேற்று (23) மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதால் அவரது உடல்நிலை அபாய கட்டத்தை எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவருக்கு இரத்தம் உறைதலுக்குத் தேவையான குருதிச்சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைந்ததால், இரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.