பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் போக்குவரத்து விதிகளை மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பண்டிகைக் காலத்தில் வீதியோரங்களிலுள்ள ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்கு வருகை தரும் நுகர்வோரினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் போதுமான வாகன தரிப்பிட வசதிகளை வழங்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

வீதியோரங்களில் முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்குமுறைகளை மீறுவோர், குறிப்பாக வாகன தரிப்பிட விதிகளைப் புறக்கணித்து வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நிலைநாட்டுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *