2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை சுமார் 184,926 பேர் நாய் கடித்து இலக்காகியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாய்மொழி மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று (20) காலை பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, சிகிச்சைக்கான தடுப்பூசிகளுக்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 950 முதல் 1,000 மில்லியன் ரூபா வரை செலவிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், 30,881 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், 1,151,350 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொதுமக்களுக்குத் தெரிவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.