நடப்பாண்டில் இதுவரை 110 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 06ஆம் திகதி வரை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 03 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். 

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை 110 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் 83 சம்பவங்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையேயான மோதல்களென தெரிவிக்கப்படுகின்றது.

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கையில் குற்றத் தடுப்பு முயற்சிகள் ஒருபோதும் தடைப்படாதெனவும் அத்துடன், அனர்த்தத்தைப் பயன்படுத்த முயலும் நபர்களை அடையாளம் கண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் எஃப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *