தாய்லாந்தில் பேருந்தொன்று கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
49 பேருடன் பயணித்த பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது , 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அது ஒரு கீழ்நோக்கி செல்லும் பாதை பிரேக்குகள் செயல்இழந்தன, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் ஆய்வொன்றிற்காக பயணித்துக்கொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்குண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்..
தாய்லாந்தின் தலைநகரிலிருந்து கிழக்காக உள்ள பிரான்சிபூரியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த பலர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள பிரதமர் பேடொங்டார்ன் சின்வத்திரா பயன்படு;த்துவதற்கு உகந்த தராதரமற்ற வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை அல்லது வாகனங்கள் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் தரம் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது பலவீனமாக காணப்படுவதாலும் வீதிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாதமையினாலும் தாய்லாந்தில் விபத்துக்கள் வழமையான விடயமாகமாறியுள்ளது.