சீகிரியாவில் சோகம்: வெளிநாட்டவரை மிதித்துக் கொன்ற யானை!

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா – பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே, இந்தக் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *