இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர்.
நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
வறுமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற காரணிகளினால் இவ்வாறு மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.