உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி உள்ளிட்டோர் இணைந்து இம்மகஜரை கையளித்துள்ளனர்.
இதனை தேர்தல் ஆணைக்குழு சாதகமாக பரீசிலிப்பாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.