இத்தினங்களில் பரவும் வைரஸ் நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த நாட்களில் சளி மற்றும் அது தொடர்பான வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. 

சில நபர்களுக்கு அதிக தீவிரத்தன்மை கொண்ட அறிகுறிகள் தென்படக்கூடும் என சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார். 

இந்த நோய்கள் அதிகரிப்பதன் ஊடாக நிமோனியா போன்ற கடுமையான நிலைமைகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார். 

வைத்தியர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“உங்களுக்கு பொதுவாக சுவாச அமைப்புடன் தொடர்புடைய அறிகுறிகள் இருந்தால், குறிப்பாக மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டை வீக்கம், இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால், அது பெரும்பாலும் சுவாச ஒவ்வாமையாக இருக்கலாம்.” பெரும்பாலும், இது நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. நுண்ணுயிரிகளில் பல வகைகள் உள்ளன. எந்தவொரு நுண்ணுயிரியும் மேற்கண்ட அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு, இது ஒரு சிறிய பாதிப்பாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு, இது நிமோனியா போன்ற கடுமையான நிலையாக இருக்கலாம். எனவே அது குறித்து கவனமாக இருப்பது முக்கியம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *