இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மின் வெட்டு தொடர்பான கால அட்டவணையும் இன்றைய தினம் (10) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டு ஒவ்வொரு வலங்களிலும் வெவ்வேறு நேரங்களில் மேற்கொள்ளப்படும்.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடாளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மின் நிலையத்தின் ஜெனரேட்டர்கள் மீண்டும் கணினியுடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.